"காமராஜர் பல்கலைகழகம் இழந்த அந்தஸ்தை 2 ஆண்டுகளில் மீண்டும் பெறும்" - புதிய துணைவேந்தர் செல்லத்துரை பேட்டி

 
Published : May 31, 2017, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
"காமராஜர் பல்கலைகழகம் இழந்த அந்தஸ்தை 2 ஆண்டுகளில் மீண்டும் பெறும்" - புதிய துணைவேந்தர் செல்லத்துரை பேட்டி

சுருக்கம்

new vice chancellor of kamaraj university pressmeet

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும் எனவும் பலகலை 2 ஆண்டுகளில் மீண்டும் இழந்த அந்தஸ்தை பெறும் எனவும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை வேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனின் பதவி காலம் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது புதிய துணைவேந்தராக இப்பல்கலை முன்னாள் பேராசிரியர் செல்லத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பல்கலை கழகத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்ததது. இதற்காக முன்னாள் கவர்னர் ரோசய்யா, பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் தேடல் குழு அமைத்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பரிசீலித்து மூன்று பேர் கொண்ட பட்டியலை தற்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தேடல் குழு அளித்தது.

இதில் செல்லத்துரை தேர்வு செய்யப்பட்டு இப்பல்கலை கழகத்தின் 16 வது துணைவேந்தராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று துணைவேந்தர் செல்லத்துரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்னும் ஒரு மாதத்திற்குள் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் எனவும், ஆளுநரிடம் அனுமதி பெற்று தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பல்கலை கழகத்தின் அதிகாரம் பரவாக்கபடும் எனவும் ஒருவருக்கு பல பதவிகள் வழங்கபடுவது தடுத்து நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பல்கலை கழகத்தின் நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்படும் எனவும், 2 ஆண்டுகளில் இழந்த அந்தஸ்தை பல்கலை கழகம் மீண்டும் பெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காலியாக உள்ள நிர்வாக பணியிடங்கள் விரைவில் நிரப்படும் எனவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!