
தமிழக சட்டப்பேரவை செயலாளராக இருந்த ஜமாலுதீன் இன்றுடன் ஒய்வு பெற்றதால் புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி சட்டப்பேரவை செயலாளராக ஜமாலுதீன் நியமிக்க்பட்டார். 2012 ஆம் ஆண்டு மே 31 ல் ஜமாலுதீன் பதவி காலம் நிறைவடைந்தது. ஆனால் அவரின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று அவரின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பூபதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி பிறந்தார்.
மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் எம்.ஏ, எம்.பில் முடித்து பி.எல்.படிப்பையும் முடித்துள்ளார்.
1983 ல் சட்டப்பேரவையில் உதவி பிரிவு அலுவலாராக சேர்ந்தவர் பூபதி. 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, ஜமாலுதீன் ஒய்வு பெற்றதை தொடர்ந்து பூபதியை புதிய செயலாளராக நியமித்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த பதவில் 8 மாதங்கள் பணியாற்றி வரும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒய்வு பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து சபாநாயகர் தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றார் பூபதி. மேலும் சாட்டபேரவை செயலாளர் அறையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.