
அடுத்த ஆப்பு ரெடி..! “பரம்பரை சொத்து மீதும் புது வரி”...! எப்படி மாட்ட போறீங்க தெரியுமா..?
வரி வரி வரி.... தெறிக்க விடுகிறது வரி....ஒன்று போனால், மற்றொன்றில் வருகிறது புதிய வரி
தற்போது நடைபெற்று வரும் ஜி எஸ் டி கவன்சில் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெட்ரோல் டீசல், தங்கம் என அனைத்தும் அடங்கும்.
அதில் தங்கம் வாங்குவதில் விதி தளர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்கட்டும் வேறு எதற்கெல்லாம் வரி விதிக்கலாம் என திட்டம் போட்ட மத்திய அரசு, பரம்பரை சொத்துக்கள் மீது வரி விதித்தால் என்ன என நினைத்தது.
அதன் எதிரொலியாக அடுத்த பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த விதி அமலுக்கு வரும் தருவாயில், யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் தெரியுமா?
பொதுவாகவே அவர்கள் பணக்காரர்கள் என நாம் சாதாரணமாக சொல்கிறோம் அல்லவா? இவர்கள் தான் முதல் டார்கெட்
அதாவது இதற்கு முன்னதாக ஒருவர் இறந்தபின்,அதன் மூலம் வாரிசுகளுக்கு கிடைக்கக் கூடிய சொத்தின் மீதோ அல்லது உயில் மூலமாக கிடைக்கக்கூடிய சொத்தின் மீதோ இதுவரை தனி வரி என்ற ஒன்று இல்லாமல் இருந்தது.
இதன் காரணமாக பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களாக உள்ளவர்கள் பொதுவாகவே வரிஏய்ப்பு செய்வதற்காக சில யுக்திகளை கையாண்டனர்.அது எப்படினா,வங்கி கணக்கு, பங்கு முதலீடு, அசையா சொத்துக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் என இவைகள் மூலம் கணக்கு வழக்கு,கணக்கிலே வரவில்லை.அதாவது வரி ஏய்ப்பு ரொம்ப சுலபமாக செய்து வந்தனர்.
ஆனால் இதனை சுதாரித்து கொண்ட மத்திய அரசு, இதன் மீதும் புதிய வரியை ஏன் விதிக்கக்கூடாது என திட்டம் போட்டுள்ளது
இந்த விதி அமலுக்கு வந்தால், 5% முதல் 10% வரை இருக்கும். குறிப்பிட்ட அளவிற்கு அதிகமான சொத்துக்களை வைத்திருந்தால் மட்டுமே பரம்பரை சொத்துக்கள் மீது வரி விதிக்கப்படும் என்பது சற்று ஆறுதலான செய்தி தான்.
.