ஜெ சமாதியில் புதிதாக முளைத்த சிலை - தொண்டர்கள் பரவசம்

 
Published : Dec 19, 2016, 03:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
ஜெ சமாதியில் புதிதாக முளைத்த சிலை - தொண்டர்கள் பரவசம்

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் கட்சி நிர்வாகி ஒருவர் திடீரென சிலை ஒன்றை வைத்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. கட்சி தொண்டர்கள் பரவசத்துடன் வணங்கினர்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.22 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறி வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரண்மாக கடந்த டிச.5 அன்று மரணமடைந்தார்.

அவரது மரணத்தை தாங்காமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் கூடினர். எம்ஜிஆர் சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தேடி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

கோவிலாக எண்ணி அங்கு மொட்டை அடிப்பது, திருமண தம்பதிகள் ஆசி பெறுவது, திருமணத்தையே சமாதியில் நடத்துவது என தொண்டர்கள் தினமும் அவர் சமாதிக்கு வந்து செல்கின்றனர். அவரது மறைவினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அவரது சமாதி மட்டுமல்ல அவரது இல்லத்துக்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் படை எடுக்கின்றனர். இந்நிலையில் இன்று ஜெயலலிதா சமாதிக்கு பெரிய பார்சலுடன் வந்த அதிமுக மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் என்பவர்   சமாதியில் அதை பிரித்தார். அதற்குள் இரண்டடி உயரத்தில் ஜெயலலிதாவின் மார்பளவு சிலை இருந்தது. நீலவண்ண சேலையில் அவர் சிரித்தப்படி இருப்பது போன்ற தோற்றத்தில் இருந்த அந்த சிலையை ஜெயலலிதா படம் அருகே வைத்தார். 

பின்னர் கும்பிட்டு விட்டு கிளம்பி சென்றார். அவர் சென்ற பின்னர் சிலையை வரிசையில் வந்த தொண்டர்கள் பரவசத்துடன் கும்பிட்டனர். சிலை வைக்கப்பட்ட விஷயம் தீயாக பரவியது. இதை கேள்விப்பட்டு அங்கு வந்த பொதுப்பணித்துறையினர் சிலையை அங்கிருந்து எடுத்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!