ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள்…இப்போதைக்கு இல்லை ஸ்மார்ட் கார்டு…

First Published Dec 21, 2016, 7:23 AM IST
Highlights


ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள்…இப்போதைக்கு இல்லை ஸ்மார்ட் கார்டு…

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ரேஷன் கார்டுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இதற்காக 320 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கும் வேலையும் நடைபெறுகிறது. இந்நிலையில் 47 சதவீத  பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதால் அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் உள்தாள் ஒட்ட அரசு முடிவு செய்துள்ளது.

இதுவரை 5 கோடியே 43 லட்சம் பேரிடம், மட்டுமே ஆதார் எண் வாங் கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டு வடிவமைப்பு இன்னமும் முடிவாகவில்லை அது முடிவானதும், கார்டு அச்சிடும் பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்க மொபைல் ஆப்ஸ்ம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் முகவரி மாற்றம், திருத்தம் போன்ற வற்றுக்கு விண்ணப்பிக்கலாம். என்றும்  பொருட்கள் வாங்காவிட்டால், ரேஷன் கார்டு ரத்தாகாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பின், ஒரு மாதம் பொருட்கள் வாங்க விரும்பவில்லை என்றால், மொபைல் ஆப்ஸ் மூலம் அதை தெரிவிக்க வசதி செய்யப்படும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . இது போன்ற பணிகள் முடிவடைந்த பின்னரே ஸ்மார்ட் கார்டு… அதுவரை உள்தாள் ஒட்டப்பட்ட பழைய ரேஷன் கார்டு…

click me!