பொதுச் செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?...எதிர்ப்பு குரல் எழுப்பும் எக்ஸ் எம்.எல்.ஏ….

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 06:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
பொதுச் செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?...எதிர்ப்பு குரல் எழுப்பும் எக்ஸ் எம்.எல்.ஏ….

சுருக்கம்

பொதுச் செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?...எதிர்ப்பு குரல் எழுப்பும் எக்ஸ் எம்.எல்.ஏ….

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து அதிமுக வின் பொதுச் செயலாளராக ஜெவின் தோழி சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.

தமிழகம் எங்கும் சசிகலாவுக்கு  ஆதரவாக பேனர்களும், வால் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கட்சியில் சசிகலாவுக்கு எதிராகவும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதோடு அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்நிலையில் அதிமுக வை தொடங்கிய 7 பேரில் ஒருவரும், திருச்சி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான திரு சவுந்திரராஜன்.  அதிமுக பொதுச் செயலாளராக சசிகலலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் சசிகலாவை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளரானால் மக்களை அக்கட்சியை கைப்பற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தற்போது  அதிமுக வில்  பதவியில்  இருப்பவர்கள்  மட்டுமே சசிகலாவை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருவதாக சவுந்தரராஜன் கூறினார்.

  

PREV
click me!

Recommended Stories

திருமாவளவன் அறிக்கை, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து வன்னியரசு பேட்டி
நான் என்றும் பதவியை எதிர்பார்த்தது இல்லை" - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்