ஆம்னி பஸ்சில் திடீர் தீ விபத்து - 15 பேரை காப்பாற்றிய கல்லூரி மாணவன்

First Published Dec 20, 2016, 3:49 PM IST
Highlights


சென்னையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்றத ஆம்னி பஸ் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர் ராம்சுந்த, தூங்கிக் கொண்டிருந்த அனைத்து பயணிகளையும் எழுப்பி தப்பிக்க வைத்ததுடன், டிரைவரிடம் விரைந்து சென்று கூறி பஸ்சை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மாணவர் ராம்சுந்தர், டிரைவரிடம் பஸ் தீப்பற்றி எரிவது பற்றி கூறிவிட்டு, அவரால் மீண்டும் கடைசி இருக்கைக்கு வந்து, தனது பை உள்ளிட்ட உடைமைகளை எடுக்க முடியவில்லை. இதில் இவரது படிப்பு தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் பையில் கொண்டுவந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டன.

இது குறித்து மாணவர் ராம்சுந்தர் கூறும்போது, எனது பொருட்கள், சான்றிதழ் எரிந்தது குறித்து கவலையில்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து அனைவரையும் ஒரு சேதமும் இல்லாமல் காப்பாற்றியது நிம்மதியாக இருக்கிறது என்றார்.

மாணவன் ராம்சுந்தர், உரிய நேரத்தில், 16 உயிர்களையும் காப்பாற்றியதை டிரைவர்கள் மற்றும் பயணிகள் பாராட்டினர். எரிந்த பேருந்தின் மதிப்பு ரூ.75 லட்சம் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறர்கள்.

click me!