TNPSC இல் "திருக்குறள்" நீக்கமா ? மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி... அதிர்ச்சியில் மாணவர்கள்..?

Published : Dec 25, 2021, 07:50 AM IST
TNPSC இல் "திருக்குறள்" நீக்கமா ? மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி... அதிர்ச்சியில் மாணவர்கள்..?

சுருக்கம்

அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது திருக்குறள் பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருப்பதால், புது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட பலவகையான தேர்வுகளில் என்னென்ன பாடதிட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் வெளியிடப்பட்டன. இதில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த திருக்குறள் பாடத்திட்ட பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தினசரி வாழ்வில் திருக்குறள் பயன்பாடு, மனித இனத்தில் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கம், சமூக பொருளாதார அரசியலில் திருக்குறளின் பங்கு, திருக்குறளின் தத்துவம் என 6 தலைப்புகளில் திருக்குறன் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.  2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்தது. 

ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி நீக்கப்பட்டுள்ளது. 2019க்கு முன்பு இருந்த பாடத்திட்டம் மீண்டும் இடம்பெற்றிருப்பதாக துறைசார்ந்த பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருக்குறள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருப்பது தமிழார்வலர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?