
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மனுநீதி நாளான இன்று மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர், குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மண்ணெண்ணையை எடுத்துவரும் அளவுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு இருந்தது சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து மனு நீதி நாளான இன்று பொதுமக்கள் ஏராளமானோர், நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வருகின்றனர். குடும்பமே தீக்குளித்து இறந்த நிகழ்வின் எதிரொலியாக அதுமாதிரியான சம்பவங்கள் இனிமேல் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் 8 வாயில்கள் மூடப்பட்டு, 2 வாயில்களின் வழியாக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவற்றிலும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. மனு கொடுக்க செல்லும் பொதுமக்களிடம் போலீசார் தீவிர சோதனை மேற்கொள்கின்றனர்.