
நீட் தேர்வு கவுன்சிலிங் தொடர்பான வழக்கை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் பயன்படுத்தப்படவில்லை என கூறி தமிழக மாணவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்தது. ஆனால் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்ற தடையை விலக்கி உத்தரவிட்டது.
இதையடுத்து நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் இந்த வழக்கை 17-ம் தேதிக்கு முன் விசாரித்து தீர்ப்பளிக்க சிபிஎஸ்இ வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஜூலை 14-ம் தேதியே வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அனைத்துத் தரப்பினரும் விசாரணைக்குத் தயாராக வருமாறும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வல்கர் உத்தரவிட்டுள்ளனர்.