
ஏலகிரி மலையில் தேக்கு மரங்களை வெட்டிய விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி எஸ்பி சுப்பு லட்சுமி சிபிசிஐடியில் புகார் மனு அளித்துள்ளார்.
ஏலகிரி மலைப்பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தருமபுரியில் எஸ்.பி. சுப்புலட்சுமி தலைமியின் கீழ் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வேல்முருகனும் அவருடன் வேலை பார்க்கும் மூன்று காவலர்களும் சேர்ந்து ஏலகிரி மலைப்பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி உள்ளனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் மீடியாக்களுக்கும் வன அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த வன அதிகாரிகள் வேல்முருகன் உட்பட இரண்டு போலீசாரை கைது செய்தனர். மேலும் இரண்டு காவலர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதையறிந்த எஸ்பி சுபலட்சுமி நேற்று இரவு காவல்துறை வாகனத்திற்கு டீசல் நிரப்ப அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பியதாகவும், போனவர்கள் வரவே இல்லை எனவும் GD யில் காண்பித்து உள்ளார்.
இதை தொடர்ந்து பெண் காவல் அதிகாரிக்காகவே அவர்கள் மரங்கள் வெட்டியதாக வலைதளங்களில் மெசேஜ் ஒன்று வைரலாகி வந்தது.
அதில், தருமபுரி எஸ்.பி. சுப்புலட்சுமி அம்பத்தூரில் சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும், இதற்கான வேலைகளில் காவலர்களை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
எஸ்.பி. வன அதிகாரிகளிடம் பேரம் பேசி அனுமதியும் வாங்கி விட்டதாகவும், அதனாலேயே காவலர்கள் மரம் வெட்ட சென்றதாகவும் அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் எஸ்பி கொடுத்த GD அறிக்கை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
தலைமை நிறுவனத்தில் இருக்கும் வாகனத்திற்கு டீசல் நிரப்ப வேண்டுமென்றால் காவல்துறையில் எப்போதுமே மோட்டார் வாகன எழுத்தர் வாகன ஓட்டுநரோடு செல்வார். ஆனால் எப்படி தற்போது மட்டும் செல்ல வில்லை?
வாகனத்தோடு காவலர்களை காணவில்லை என்றால் ஏன் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்க வில்லை?
காவலர்களை காணவில்லை என்றவுடன் செல்போனுக்கு ஏன் தொடர்பு கொள்ளவில்லை. அது ஏன்?
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஏலகிரி மலையில் தேக்கு மரங்களை வெட்டிய விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி எஸ்பி சுப்பு லட்சுமி சிபிசிஐடியில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ஏலகிரி மலையில் தேக்கு மரம் கடத்திய வழக்கில் 2 போலீசார் அளித்துள்ள வாக்குமூலத்தில், தாங்கள்தான் தேக்கு மரங்களை கடத்தியதாகவும், இந்த கடத்தலுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், காவலர்களின் பொறுப்பாளர்களான ஏட்டுகள், எஸ்.ஐ.க்கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் என்று பல அதிகாரிகள் உள்ள போது தான் அனுப்பித்தான் மரங்களை கடத்தியதாக போலீசார் தெரிவித்ததாக வீண் வதந்திகளை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
இதனால் தன் மீது விண் பழி சுமத்துகிறவர்கள் மீதும், வதந்தி பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.