
தமிழகத்தின் புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செவய்துள்ளது. இதற்கு ஏதிராக தமிழகம் முழுவது போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமம் போராட்டத்துக்கான மையமாக செயல்படுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஏதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம், நேற்று தமிழக அரசு சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுடன், பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஏதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறினார். மேலும் போராட்டக் குழுவினர் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இதைதொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முடிவு செய்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி, டெல்லியில் பிரதமரை சந்திக்க சென்றார். இதனால், இந்த சந்திப்பு பாதியில் நின்றது.
இந்நிலையில், நெடுவாசல் போராட்டக்குழுவவினர், முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை, இன்று சந்திப்பதற்காக தலைமை செயலகம் வந்துள்ளனர்.