தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்யக் கூடாது - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

 
Published : Nov 14, 2017, 08:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்யக் கூடாது - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

National Rural Employment Guarantee Scheme should not be abolished - Liberation Party Panel Demonstration

தூத்துக்குடி

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் வழக்கம்போல் வேலை வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்யக் கூடாது" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு விசிகவின் தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார்.

இதில், மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் தமிழ்குட்டி, ஒன்றிய செயலாளர்கள் சங்க தமிழன், தமிழ் வளவன், நகர செயலாளர்கள் உதயா, அல் அமீன், சமூக நல்லிணக்க பேரவை அமைப்பாளர் தமிழ்பரிதி, யாசர் அராபத், விடுதலை செழியன், சிவா, அருண் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக திருச்செந்தூர் உதவி ஆட்சியர் அலுவலகம், யூனியன் அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு