உஷார் மக்களே: மளிகை, பெட்டிக் கடைகளில் 25 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு...

First Published Nov 14, 2017, 8:39 AM IST
Highlights
petty shops inventory expenses worth 25000


திருவாரூர்

திருவாரூரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய சோதனையில் 24700 மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மளிகைக் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

திருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் கோ.செல்வராஜ் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், ரூ. 5800 மதிப்பிலான காலாவதியான பிஸ்கட்கள், ரூ.12200 மதிப்பிலான காலாவதியான மளிகைப் பொருள்கள், ரூ. 6700 மதிப்பிலான தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களஸ்போன்றவை அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்தப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பின்னர், பறிமுதல் செய்யப்பட்டப் பொருள்கள் அனைத்தும் நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.

திடிரென நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,  உணவுப் பாதுகாப்பு அலுவர்கள் க. மணாழகன் (மன்னார்குடி), என்.ரெங்கராஜ் (கூத்தாநல்லூர்), எஸ். செல்வகுமார் (முத்துப்பேட்டை), சுகாதார ஆய்வாளர் சு. பிரபாகரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

click me!