நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்றும் மனம் வருந்தி கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது என்று கூறினார்.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.
தருமபுரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
நாங்குநேரியில் நடந்தது என்ன?
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு என்ற பகுதியை சேர்ந்தவர் தான் முனியாண்டி இவருடைய மனைவி அம்பிகா, இந்த தம்பதிக்கு சின்னதுரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சின்னத்துரை அந்த ஊரில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருடைய தங்கை ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சின்னதுறையை சாதிய அடையாளம் கொண்டு சில மாணவர்கள் பள்ளியில் கேள்வி கிண்டல் செய்து வந்ததாகவும், அவரை அடிக்கடி ஜாதியின் பெயரை சொல்லி அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சின்னதுரை பள்ளிக்கு செல்ல மறுத்து வீட்டிலேயே தங்கி உள்ளார், இந்த தகவல் அறிந்த அவருடைய பெற்றோர், பள்ளிக்கு சென்று புகார் அளித்த நிலையில், சின்னதுறையிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆறு மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அவர்களை கடுமையாக கண்டித்து உள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் கண்டித்ததுனால் கடுப்பாகிய அந்த மாணவர்கள் ஆறு பேர், நேரடியாக சின்னதுரையில் வீட்டுக்கு சென்று பலமுறை அவரை அறிவாளால் வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவருடைய தங்கையையும் சரமாரியாக வெட்டி, அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சின்னதுறையும் அவருடைய தங்கையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆறு மாணவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் தற்பொழுது அவர்கள் கண்காணிப்பு இல்லத்தில் போலீசார் பாதுகாப்பில் உள்ளனர். இவர்கள் மீது SC ST வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு