
நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன். மணல் கடத்தலை வாகன தணிக்கையில் நேற்றிரவு ஈடுபட்டுள்ளார். அப்போது சேலத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது லாரியை மடக்கி விசாரித்துள்ளார். சின்னத்தம்பியிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும்கூட லாரியை விடுவிக்க 5000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து தன்னிடம் இருந்த 5000 ரூபாயை வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் சின்னத்தம்பி லஞ்சமாக வழங்கியுள்ளார். மீதமுள்ள 5000 ரூபாயை நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொடுக்குமாறு வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சின்னத்தம்பி புகார் கொடுத்தார். இதையடுத்து இன்று காலை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் சின்னத்தம்பியிடம் இருந்து 5000 ரூபாயை லஞ்சமாக பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணனை கையும் களவுமாக கைது செய்தனர். பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.