நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்! கிருஷ்ணகிரியில் களமிறங்கும் வீரப்பனின் மகள் வித்யாராணி!

By SG BalanFirst Published Mar 24, 2024, 12:00 AM IST
Highlights

கிருஷ்ணகிரி தொகுதிக்கும் யார் வேட்பாளர் என்பது சஸ்பென்ஸாக இருந்த நிலையில், வீரப்பனின் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சி சார்பில் அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் சென்னை கோவிலம்பாக்கத்தில் இன்று மாலை நடெபெற்றது.

நா.த.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஏற்கெனவே 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியான நிலையில் இன்று அதிகாரபூர்வமான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி தொகுதிக்கும் யார் வேட்பாளர் என்பது சஸ்பென்ஸாக இருந்த நிலையில், வீரப்பனின் மகள் வித்யாராணி நாம் தமிழர் கட்சி சார்பில் அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "என் மக்களும், என் சொந்தங்களும் சின்னத்தை தேட மாட்டார்கள், என்னைத்தான் தேடுவார்கள். சின்னத்தை பார்த்து வாக்கு செலுத்தும் முறையை திருத்துங்கள், நல்ல எண்ணத்தை பார்த்து ஓட்டு போடுங்கள்" எனக் கேட்டுகொண்டார்.

நோயாளிகளே இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை மருத்துவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்திருப்பதாகவும் சீமான் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் போட்டியிட்டனா். ஆனால், இந்த மக்களவைத் தோ்தலில் அந்தச் சின்னமானது கா்நாடகத்தைச் சோ்ந்த புதிய கட்சியான பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக எடுத்த ஜெராக்ஸ்... பாஜகவின் அழுகுனி ஆட்டம்... திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியில் பின்வருமாறு:

1. திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர் 

2. வடசென்னை - டாக்டர். அமுதினி

3. தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4. மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்

5. திருப்பெரும்புதூர் - டாக்டர். வெ.ரவிச்சந்திரன்

6. காஞ்சிபுரம் - வி.சந்தோஷ்குமார்

7. அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8. வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்

9. தருமபுரி - டாக்டர். கா.அபிநயா

10. திருவண்ணாமலை - டாக்டர். ரா.ரமேஷ்பாபு

11.ஆரணி - டாக்டர். கு.பாக்கியலட்சுமி

12.விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்

13.கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14.சேலம் - மருத்துவர் க. மனோஜ்குமார்

15.நாமக்கல் - பொறியாளர் க.கனிமொழி

16. ஈரோடு - மருத்துவர் மு.கார்மேகன்

17.திருப்பூர் - மா.கி.சீதாலட்சுமி

18.நீலகிரி - ஆ.ஜெயகுமார்

19.கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி - மருத்துவர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் - மருத்துவர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - மருத்துவர் ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு  ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - மருத்துவர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - மருத்துவர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி - மருத்துவர் ரா.மேனகா

click me!