நளினியின் சுயசரிதை : வரும் 24ஆம் தேதி வெளியீடு

 
Published : Nov 20, 2016, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
நளினியின் சுயசரிதை : வரும் 24ஆம் தேதி வெளியீடு

சுருக்கம்

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு,25 ஆண்டுகளாக  சிறையில் உள்ள நளினியின் சுயசரிதை வரும் நவ.24ல் வெளியிடப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி மற்றும் அவரது கணவர் முருகன். கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்கள்,பலமுறை தங்களின் விடுதலைக்காக சட்டத்தை நாடியுள்ளனர்.

ஆனால்,இவர்களுக்கு விடுதலை வழங்கப்படவில்லை. இந்நிலையில், நளினி தன்னுடைய வாழ்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.இதில் நளினியின் குழந்தை பருவம், இளமைப்பருவம், முருகனுடன் ஏற்பட்ட காதல் அனுபவம், திருமண வாழ்கை, ராஜீவ் கொலை, பின்னர் சிறையில் அனுபவித்த இன்னல்கள்,சிறையிலே குழந்தை பெற்றது, தன மகளுக்கு ழுதிய கடிதங்கள்,சிறையில் இருக்கும்போது தன்னை சந்தித்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த புத்தகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் என்ன நடந்தது எனவும் எழுதப்பட்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் இறுதி அத்தியாத்தில் பிரியங்கா காந்திக்கும், தனக்கும் நடந்த சந்திப்பு பற்றியும் நளினி எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சுயசரிதை வெளியீட்டு விழா  வரும் நவ.24ல் வடபழனியில் நடைபெற உள்ளது. இதில், வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்
அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. பெருமிதமாக மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்