கூடங்குளம் 3,4-வது அணு உலைகள் 2023ம் ஆண்டு செயல்படும்!

 
Published : Nov 20, 2016, 12:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
கூடங்குளம் 3,4-வது அணு உலைகள் 2023ம் ஆண்டு செயல்படும்!

சுருக்கம்

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள 3வது மற்றும் 4வது அணு உலைகள் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என கூடங்குளம் அணுமின்நிலைய திட்ட வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில், கேந்திர நிறுவனர் ஏக்நாத் ரானடே பிறந்தநாள் விழா மற்றும் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கூடங்குளம் அணுமின்  திட்ட வளாக இயக்குநர் எஸ்.சுந்தர் பார்வையிட்டார். 

பின்னா் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மொத்தம் 6 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் முதல் மற்றும் இரண்டாவது அணுஉலைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தொிவித்தார். தற்போது 3 மற்றும் 4வது அணுஉலைகளுக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும், 2023 ம் ஆண்டு முதல் மின்உற்பத்தியை தொடங்கும் என்றும் சுந்தர் கூறினாா்.

மேலும் 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தொிவித்த அவா், கூடங்குளம் அணுமின்நிலையம் பற்றி மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறது என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாள்தோறும் பொதுமக்கள் 200 போ் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் சுந்தா் தொிவித்தாா்.

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக
அதிமுக விருப்ப மனுவுக்கு ரூ 18 லட்சம் பணம் கட்டிய நபர்..! 120 தொகுதிகளில் எடப்பாடி போட்டியிட மனு