சிறையில் முருகன், நளினி சந்திப்பு - ஜீவசமாதி அடைய மனைவி எதிர்ப்பு!!

Asianet News Tamil  
Published : Aug 06, 2017, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
சிறையில் முருகன், நளினி சந்திப்பு - ஜீவசமாதி அடைய மனைவி எதிர்ப்பு!!

சுருக்கம்

nalini and murugan meeting in prison

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, கணவன் ஜீவசமாதி அடைவதற்கு, மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும், இதே வழக்கில் தண்டனை பெற்ற அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும், நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை அரைமணிநேரம் சந்தித்து பேசி வருகிறார்கள். அதன்படி, நேற்று சந்திப்பு நடந்தது.

அப்போது, ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டதால் முருகன், சிறைச்சாலையிலேயே ஜீவசமாதி அடைய முடிவு செய்தள்ளார். அதற்கு நளினி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் லண்டனில் உள்ள மகள் திருமணத்தை விமர்சையாகவும், சந்தோஷமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என மனைவி நளினியிடம் அவர் கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து மீண்டும் அவர்கள், தனித்தனி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நளினி நீதிமன்றத்தில் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான பதில், நாளைக்குள் தமிழக அரசு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாளை தமிழக அரசு அளிக்கும் பதிலில், நளினிக்கு பரோல் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்பது தெரிய வரும்.

PREV
click me!

Recommended Stories

எங்க தலைவர் விஜயை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க EPS! அதுக்கு நீங்க தகுதியான ஆளா! ரவுண்ட் கட்டும் நாஞ்சில் சம்பத்!
Tamil News Live today 30 January 2026: Pandian Stores S2 E 703 - நள்ளிரவில் சென்னைக்கு கிளம்பிய கதிர் - ராஜி! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்த பூகம்பம்?