என்ன தான் சார் உங்க பிரச்சினை? EPSஐ சந்திக்காமல் முறுக்கீட்டு போன நயினார் - குழப்பத்தில் தொண்டர்கள்

Published : Jul 21, 2025, 10:32 AM IST
nainar nagendran

சுருக்கம்

திருவாரூரில் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கூட்டணிக்கட்சி தலைவரான நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்ற சம்பவம் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. இக்கூட்டணியை மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சி தலைவர்கள் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7ம் தேதி தொடங்கினார்.

இந்த பிரசாரத்தின் தொடக்க விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் அதிமுக சார்பில் நடத்தப்படும் பிரசாரத்தில் அதிமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என பாஜக தலைவர்கள் உத்தரவிட்டனர்.

இதனிடையே தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என பாஜக தலைவர்களும், அதிமுக யாரிடமும் ஆட்சியை பங்கிட்டு கொள்ளாது, நாங்கள் தனித்தே ஆட்சி நடத்துவோம் என அதிமுக தலைவர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு திருத்துறைபூண்டி அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவ்வழியாக வந்தார். ஆனால் பழனிசாமி தனியார் விடுதியில் தங்கியிருந்தும் அவ்வழியே வந்த பாஜக தலைவர் அவரை சந்திக்காமல் சென்றது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!