புயல் தற்போதைய நிலவரம் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

First Published Dec 1, 2016, 10:18 AM IST
Highlights


நாடா புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: நாடா தற்போது புயலாகத்தான் உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டுள்ள நாடா புயல் கடந்த 6 மணி நேர நிலவரப்படி 28 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

புயலின் மேலடுக்கு கீழடுக்கில் வேறுபாடு அதிகம் உள்ள காரணத்தால் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வேதாரண்யம் , புதுச்சேரி இடையே கடலூர் அருகே கரையை கடக்க உள்ளது. 

இதன் காரணமாக அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சில நேரம் கனமழை வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மிதமான மழை பெய்யும் , தரைக்காற்று பலமாக வீசக்கூடும்.

தற்போபுதுச்சேரிக்கு தென் கிழக்கில் 270 கி.மீ.தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதிகபடச மழையாக வேதாரண்யத்தில் 5 செ.மீ, தலைஞாயிறில் 4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

click me!