பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்படம் இயக்குனரான நாச்சியாள் சுகந்தி பல்வேறு ஊடகங்களில் பயணித்தவர். கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் மிக தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை வேட்பாளராக அறிவித்த நாச்சியாள் சுகந்தி திடீரென எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்படம் இயக்குனரான நாச்சியாள் சுகந்தி பல்வேறு ஊடகங்களில் பயணித்தவர். கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் மிக தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். தொலைக்காட்சி விவாதங்களிலும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டே பொதுக்கூட்டம் ஒன்றில் தென் சென்னை தொகுதிக்கான வேட்பாளராக நாச்சியாள் சுகந்தி அறிவிக்கப்பட்டார். அப்போதே நாம் தமிழர் கட்சியில் நாச்சியாள் சுகந்திக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நாச்சியாள் சுகந்தி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நாச்சியாள் சுகந்தி தனது எக்ஸ் தளத்தில்: இரண்டு கோடி தொண்டர்களையுடைய அதிமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.