
2021 ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடக்கும் என்றும், ஆனால் அந்த தேர்தலின் போது அமைச்சர் ஜெயகுமாரின் கம்பெனி இருக்காது எனவும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணி சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன் சட்டப் பேரவைக்கு தேர்தல் வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
ஓபிஎஸ்ன் பேச்சு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ,ஓபிஎஸ்ன் பேச்சு விஷமத்தனமானது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் என்றும், அடுத்த தேர்தல் 2021 ஆம் ஆண்டுதான் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு தனது டிடுவிட்டர் மூலம் கவுண்ட்டர் கொடுத்துள்ள மைத்ரேயன் எம்.பி., தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்கு உறுதியாக தேர்தல் நடக்கும் என்றும், ஆனால் அப்போது ஜெயகுமார் கம்பெனி இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.