மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் புதுக்கோட்டை அருகே பொதுமக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளளது.
மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் புதுக்கோட்டை அருகே பொதுமக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளளது.
தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல், மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், காய்ச்சல்வேகமாக பரவி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமானோர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
இதைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். குன்றாண்டார்கோவில் உதவி தொடக்க கல்வி அலுவலராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி மலர்விழி (50). ஆலங்குடி அருகே ஆலங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மலர்விழிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அதே பகுதியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து மலர்விழியை, புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைதொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மலர்விழியை அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், மலர்விழி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.