காங். நிர்வாகி ஜெயக்குமார் கொலையில் புதிய திருப்பம்! திட்டம் போட்டவரை நெருக்கும் போலீஸ்!

By SG Balan  |  First Published May 11, 2024, 2:59 PM IST

ஜெயக்குமாருக்கு ரூ.20 கோடி வரை கடன் இருப்பதாகவும் என்றும் எம்.எல்.ஏ. ஒருவர் ஜெயக்குமாரை அழைத்து இதுமாதிரி கடிதம் எழுதிவிட்டு கொஞ்ச காலம் தலைமறைவாக இருந்தால் பிரச்சனை நீர்ந்துவிடும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.


நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதி காலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு உடல் கருகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயக்குமார் இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீசார், பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினர், வீட்டுப் பணியாளர்கள், நண்பர்கள் பலரிடம் விசாரித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், ஜெயக்குமாருக்கு ரூ.20 கோடி வரை கடன் இருப்பதாகவும் என்றும் எம்.எல்.ஏ. ஒருவர் ஜெயக்குமாரை அழைத்து இதுமாதிரி கடிதம் எழுதிவிட்டு கொஞ்ச காலம் தலைமறைவாக இருந்தால் பிரச்சனை நீர்ந்துவிடும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

 

அவர் சொன்னதைக் கேட்டு அப்படியே ஜெயக்குமார் கடிதம் எழுதியிருக்கின்றார். ஜெயக்குமார் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட மே 4ஆம் தேதி அதிகாலையே சென்னையில் உள்ள செய்தியாளர்களுக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கடிதத்தைப் பரப்பியதும் அந்த எம்.எல்.ஏ. இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடேயே, ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெபரின் அப்பாவிற்குக் கொடுக்கவேண்டிய பணத்தில் எனக்கு இவ்வளவு வேண்டும் என்று கேட்டதாகவும் அவரி உவரி போலீசார்  தினமும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதால், ஒரு குழுவாக இந்தக் கொலையைச் செய்திருக்க வாய்ப்பு இருப்பதாகப் போலீசார் கருதுகின்றனர். குறிப்பாக வள்ளியூரில் கஞ்சா வழக்கில் கைதான ஆசாமிகள் ரவுடிகள் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சந்தேகிக்கின்றனர்.

click me!