
கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசாருக்கு ராஜஸ்தான் போலீசார் உதவ வில்லை எனவும் அதிக போலீசாரை அனுப்பியிருந்தால் தன் கணவர் இறந்திருக்கமாட்டார் எனவும் ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரிய பாண்டியின் மனைவி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம்தான் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளராக பெரிய பாண்டி என்பவர் பொறுப்பேற்றார்.
இதையடுத்து கொளத்தூரில் கடந்த மாதம் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருடர்களை பிடிக்க பெரிய பாண்டி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ராஜஸ்தான் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை ராஜஸ்தானில் கொள்ளை கும்பல் சுட்டுக்கொன்றது.
காவல் ஆய்வாளர் உயிரிழப்புக்கு காரணம் கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசாருக்கு ராஜஸ்தான் போலீசார் உதவவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுவே சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் உயிரிழக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த பெரிய பாண்டியனின் மனைவி பானுரேகா கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என கண்ணீருடன் தெரிவித்தார்.