
மஜா காட்டி முதலிடத்தை பிடித்த தோனி...! இவருக்கா வயதாகி விட்டது...
வயதானலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னமும் மாறல என சொல்லும் அளவிற்கு தோனியின் செயல்பாடு அமைந்துள்ளது
அதாவது சக விளையாட்டு வீர்ர்கள்,சமீப காலமாக தோனி சரியாக விளையாட முடிவதில்லை ஆதலால் ஓய்வு பெற வேண்டும் என கருத்தை தெரிவித்து வந்தனர்
இந்நிலையில்,எனக்கா வயதாகி விட்டது என் நடை என்ன..என திறமை என்ன .. என் பலம் என்ன...என்பதை எல்லாம் நிரூபிக்கும் விதமாக,தோனிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே விளையாட்டுக்காக நடந்த 100மீட்டர் ஓட்டப்பந்தயம் அமைந்துள்ளது
இந்திய அணிக்காக ஒருநாள், டி20, மினி உலகக் கோப்பை என மூன்று விதமான உலகக் கோப்பைகளையும் இந்தியாவுக்காக வென்று தந்த கேப்டன் தோனி என்பது உலகம் அறிந்த உண்மை ...
இந்நிலையில் அவரின் பிட்னஸ் எப்படி என நிரூபிக்கும் விதமாக 100மீ ஓட்டப்பந்தயம் நடந்தது.இதில் தல தோனி தான் ஹர்திக்பாண்டியாவை முந்திக்கொண்டு முதலில் ஓடி வந்து அனைவரையும் வாயை மூட வைத்துவிட்டார்
இப்பவும் யாராவது சொல்ல முடியுமா...தல தோனி விளையாட மாட்டாரா என...