
மாணவரின் உடலில் எந்த காயங்களும் இல்லை என்றும், முத்துகிருஷ்ணன் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் எம்.பில் நவீன வரலாறு படித்து வந்தார்.
தகவலறிந்து வந்த டெல்லி போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்ததையடுத்து டெல்லி காவல்துறை அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
மாணவரின் உடலில் எந்த காயங்களும் இல்லை.
முத்துகிருஷ்ணன் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை.
விசாரணை முடிந்த பிறகே முழு தகவலும் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.