
மாத ஓய்வூதியத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் இரண்டாவது நாளாக போராடி வருகின்றனர்.
வேதாரண்யத்தில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாள்களாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
வேதாரண்யம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்க கிளைச் செயலாளர் கே.ஆர். ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
“மாத ஓய்வூதியத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.
2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாத அகவிலைப்படி மற்றும் 2012-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள பணப்பயன்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்க கௌரவத் தலைவர் தங்க.குழந்தைவேலு, செயலாளர் முத்துக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.