முதுமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியது; பிற விலங்குகளும் கணக்கெடுக்கப்படும்...

First Published Dec 19, 2017, 8:12 AM IST
Highlights
Mudumalai Tiger census started in the archive Other animals are counted ...


நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் பிற வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. கால் தடயங்கள், எச்சம் போன்றவற்றை வைத்து புலிகளைக் கணக்கெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ளது முதுமலை புலிகள் காப்பகம். பருவ காலத்திற்கு முன்பும், பின்புமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் பிற வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம்.

தற்போது இக்களப்பணிக்காக கடந்த இரண்டு நாள்களாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் வனக் கல்லூரியின் பயிற்சி வனச் சரக அலுவலர்கள் 36 பேர், உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரி வன உயிரினத் துறை மாணவர்கள் 36 பேர், வனச் சரக அலுவலர்கள், வனவர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 36 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பணிக்காக தலா நான்கு பேர் அடங்கிய குழுக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன.

புலிகளின் கால் தடயங்கள், எச்சம் உள்ளிட்டவைகளைச் சேகரித்து, புலிகள் எண்ணிக்கையைக் கணக்கிட உள்ளனர். இதர விலங்குகளின் நடமாட்டம் குறித்தும் இந்தக் குழு கணக்கெடுத்து வருகின்றனர்.

click me!