பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நடு ரோட்டில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெட்ரோலை சோதனை செய்ததில் தண்ணீர் கலந்து இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை
பெட்ரோல் பங்குகளில் அளவு குறைந்து பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்படுவதாகவும், தண்ணீர் கலப்பதாகவும் பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் அவ்வப்போது வரும், இந்தநிலையில் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை முடிச்சூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் போட்டுள்ளனர். இதனையடுத்து ஒரு சில நிமிடங்களில் வண்டியானது இயங்காமல் நின்றுள்ளது. வாகனத்தில் அடைப்பும் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்காமல் புகார் வந்ததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்.
பெட்ரோல் பங்க் மூடல்
இதனையடுத்து பெட்ரோலை தண்ணீர் கேனில் பிடித்து பார்த்த போது அதிகளவு தண்ணீர் இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெட்ரோல் பங்கில் கேள்வி கேட்டபோது அதிகளவு எத்தனால் கலந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மடங்கு தண்ணீர் கலந்த பெட்டோரை விற்பனை செய்தாக பெட்ரோலை கையில் ஏந்தி பாதிக்கப்படோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வாகனங்களை பழுது பார்த்து தர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இதனையடுத்து அந்த பெட்ரோல் பங்க் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதையும் படியுங்கள்