22 மோட்டார் பைக்குகளை ஆட்டைய போட்ட "மாமன் மச்சான்ஸ்!!' - புதுப்பேட்டை வியாபாரி சிக்கினார்

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 01:14 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
22 மோட்டார் பைக்குகளை ஆட்டைய போட்ட "மாமன் மச்சான்ஸ்!!' - புதுப்பேட்டை வியாபாரி சிக்கினார்

சுருக்கம்

அசோக் நகர் பகுதியில் தொடர் பைக் திருட்ட போவதாக வந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி புதுப்பேட்டையை சேர்ந்த  மாமன் மச்சான்களை கைது. செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 22 பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை அசோக்நகர், கே.கே நகர்,எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாக புகார் வந்தது. இதையடுத்து தி.நகர் துணை கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில் அசோக்நகர் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் பைக் திருடர்களை பிடிக்க அப்பகுதியில் வாகன சோதனையில்  ஈடுபட்டனர்.

மேலும்  கே.கே நகர் பகுதியில் பைக்கை மர்ம நபர் திருடி சென்றதாக வந்த புகாரை அடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது மஞ்சள் நிற சட்டை அணிந்த ஆசாமி பைக்யை திருடியது தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மஞ்சள் சட்டை அணிந்த ஒரு நபர் பைக்குகளை திருடுவது தெரிய வந்தது.  விசாரணையில் இந்த  பகுதியில் பைக்களை திருடுவது புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சிக்கந்தர் என்பதும் உடன் இருப்பது திருநின்றவூர் பெரியார் நகரை சேர்ந்த சமீர் பாஷா என்பதும் தெரிய வந்தது. 

இருவரும் உறவினர்கள் என்பதும்  கூட்டாக இணைந்து அப்பகுதியில் பைக்களை திருடி  அதை பிரித்து அதன் உதரி பாகங்களை விற்று வந்ததும் தெரியவந்தது இதனையடுத்து ஆய்வாளர்கள் தங்கராஜ், சங்கர், ஆகியோர் கொண்ட போலீசார் ,   பைக் திருட வந்த போது அவர்களை மடிக்கி பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 22 புதிய ரக பைக்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து தொடர்ந்து  விசாரித்து வருகின்றன

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்