குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தாய்…

First Published Dec 3, 2016, 11:37 AM IST
Highlights


பெரியகுளம்,

பெரியகுளத்தில், கணவர் எங்கிருக்கிறார் என்று கேட்டு, மாமனார் வீட்டு முன்பு இரண்டு குழைந்தைகளுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் மணிகண்ட சபாபதி. இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருடைய மனைவி உமாதேவி (26). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மணிகண்ட சபாபதி குடும்பத்துடன் தேனியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற மணிகண்ட சபாபதி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உமாதேவி தேடி பார்த்துள்ளார். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உமாதேவி புகார் கொடுத்தார். ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உமாதேவி தனது இரண்டு மகள்களுடன் பெரியகுளம் வடகரையில் உள்ள மணிகண்ட சபாபதியின் தந்தை வீட்டிற்குச் சென்றார்.

அங்கு தனது கணவர் எங்கு போய் இருக்கிறார்? என்று மாமனாரிடம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இரண்டு மகள்களுடன் உமாதேவி மாமனார் வீட்டு முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த வடகரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், உ,மாதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அவரது கணவரை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர தங்களது விசாரணையைத் தொடர்ந்தனர்.

tags
click me!