"என் கணவரே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்" - போலீசில் பிடித்து கொடுத்த தாய்... சென்னையில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : May 23, 2017, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
"என் கணவரே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்" - போலீசில் பிடித்து கொடுத்த தாய்... சென்னையில் பரபரப்பு

சுருக்கம்

mother saved daughter from the sexual abuses of father

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவரை மனைவியே போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார். இவர் சென்னையில் கடந்த 59 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் தினமும் குடித்து விட்டு வந்து அனைவரும் தூங்கிய பிறகு தனது சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மிரட்டலுக்கு பயந்து சிறுமியும் யாரிடமும் சொல்ல வில்லை.

இதையடுத்து பாலியல் தொந்தரவு அதிகமாகவே சிறுமி தனது சகோதரனிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். சகோதரன் தாயிடம் கூறியுள்ளார்.

அதிசியடைந்த சுரேந்திரகுமாரின் மனைவி சைல்டு ஹெல்ப் லைன் மூலம் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் சுரேந்திரகுமாரை அதிரடியாக விசாரணை நடத்தினர்.

பின்னர், நடந்ததை ஒப்புக்கொண்ட சுரேந்திரகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

MK Stalin Vs Vijay: முதல்வர் விஜய் VS முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! பதவியேற்ற முதல் நாளே பரபர அரசியல்!
நீ வாணா பாத்துக்கலாம்” தெறிக்கவிட்ட CM விஜய்! முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய் அதிரடி பேச்சு!