இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி... சொன்னாங்க பாருங்க காரணம்...

Asianet News Tamil  
Published : Apr 24, 2018, 06:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி... சொன்னாங்க பாருங்க காரணம்...

சுருக்கம்

Mother killed two babies and try to kill herself...

கடலூர்

கடலூரில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் பெரியதெருவைச் சேர்ந்தவர் வினோத் (28). இவரும் திருச்சி பொன்மலையைச் சேர்ந்த ராமு மகள் சசிகலா (26) என்பவரும் காதலித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது மகள் வரோகா (3).

இந்த நிலையில் சசிகலா மீண்டும் கர்ப்பமானதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வினோத் வெளிநாட்டுக்குச் சென்றார். இதனால் சசிகலா திருச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

இதனிடையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றபிறகு அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சசிகலா தனது இரண்டு குழந்தைகளுடன் முட்டத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு வந்து அங்கு வசித்து வந்தார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மயிலாடுதுறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை என்று தெரிகிறது. 

நேற்று மதியம் 12 மணியளவில் சசிகலா, வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மாமியார் விஜயா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சசிகலாவை மீட்டார்.

இதனிடையில் சசிகலாவின் அருகில் இரண்டு குழந்தைகளும் மயங்கி கிடந்தது. அந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஜவகர்லால், ஆய்வாளர் ஷியாம்சுந்தர், உதவி ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சசிகலாவிடம் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், "நான் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு எனது மாமா மகன் வினோத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். 

எனக்கு 2-வது குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. கடந்த சில நாட்களாக சரியாக சாப்பிட முடியாமலும், செரிமான பிரச்சனையால் வயிற்று வலியாலும் அவதியடைந்து வந்தேன். இதற்காக பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் எனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி நேற்று எனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். 

பின்னர் நான் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றபோது, எனது மாமியார் என்னை காப்பாற்றிவிட்டார்" என்று அவர் காவலாளர்களிடம் தெரிவித்தார். 

இதனையடுத்து சசிகலா சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதுபற்றி விஜயா காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி