மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தாய் மற்றும் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு...

 
Published : Jan 10, 2018, 08:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தாய் மற்றும் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு...

சுருக்கம்

Mother and daughter petrol in Madurai Collector office

மதுரை

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தாய் மற்றும் மகள் தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இராமலிங்கம். இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் இராமலிங்கத்தின் மனைவி மீனாட்சி (41). மகள் நர்மதா ஆகிய இருவரும் நேற்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

ஆட்சியர் வளாகத்தில் நின்றுக் கொண்டிருந்த அவர்கள் திடீரென்று தங்கள் கைகளில் இருந்த பெட்ரோலை எடுத்து தங்களது உடல்களில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர்.

அப்போது அங்கிருந்த மக்கள் மற்றும் காவலாளர்கள் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேன்கள், தீப்பெட்டிகளை பறித்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றியும் காப்பாற்றினர்.

பின்னர் அவர்கள்  இருவரிடமும் காவலாளர்கள்ர் விசாரித்ததில் மீனாட்சி கூறியது, "எனது கணவர் இராமலிங்கத்துக்குச் சொந்தமாக பைக்காராவில் 4 சென்ட் நிலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நான் எனது மகளுடன் அந்த இடத்தில் குடியேறச் சென்றேன். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் எங்களை தரக்குறைவாக பேசியதோடு கொலை செய்ய முயன்றார்.

இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவலாளார்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தனது மகளுடன் தீக்குளிக்க முயன்றேன்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காவலாளார்கள், இதுகுறித்த மனுவை ஆட்சியரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!