தமிழ்நாட்டில் அதிக குற்றம் நடைபெறும் 10 ரயில் நிலையங்கள்!

By Manikanda Prabu  |  First Published Aug 14, 2023, 8:07 AM IST

தமிழ்நாட்டில் அதிக குற்றம் நடைபெறும் 10 ரயில் நிலையங்களை கண்டறிந்துள்ள ரயில்வே போலீசார் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த திட்டமிட்டுள்ளனர்


தெற்கு ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 725 ரயில் நிலையங்கள் இருக்கும் நிலையில், அதில் அதிக குற்றங்கள் நடைபெறும் ரயில் நிலையங்களை கண்டறிந்து அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி, தெற்கு ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட சென்னை சென்ட்ரல், சேலம், ஈரோடு உட்பட அதிக குற்றம் நடைபெறும் 10 ரயில் நிலையங்களை ரயில்வே போலீசார் கண்டறிந்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், ரயில் நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குறைபாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் நடக்கும் கொலைகள், கடத்தல்கள், திருட்டு சம்பவங்களால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள்: பள்ளிகளில் இன்று இனிப்பு பொங்கல்!

இதுகுறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையில், அதிக குற்றங்கள் நடைபெறும் ரயில் நிலையங்களை ரயில்வே போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், “தமிழகத்தில் அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், சென்னை  எழும்பூர், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை, தாம்பரம், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு ஆகிய 10 நிலையங்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இங்கு வெளி மாநில ரயில்கள் அதிகம் வந்து செல்வதால் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேம்படுத்தப்படும். இப்போது உள்ளதைவிட கூடுதல் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் தேவையற்ற நுழைவுவாயில்கள் மூடப்படும். சுற்றுச்சுவர் அமைத்து கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். மாதம்தோறும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!