
நாகப்பட்டினம்
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைமையில் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பல்வேறு கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார்.
“கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்.
திருமுல்லைவாசல் - கீழமூவர்க்கரை உயர்மட்ட பாலத்துக்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் செல்ல.சேது. ரவிக்குமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜ்குமார், மனிதநேய மக்கள் கட்சி நாகை வடக்கு மாவட்டச் செயலர் ஆரிப், திராவிட கழக மாவட்ட தலைவர் ஜெகதீசன், ஒன்றிய விவசாய சங்க செயலர் விஸ்வநாதன் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.