குடிக்காம மட்டும் இருந்திருந்தா எங்க அப்பா மன்னாதி மன்னன்… மதுப் பழக்கத்தால் இறந்து போன தந்தைக்கு பேனர் வைத்த குழந்தைகள்…

 
Published : May 12, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
குடிக்காம மட்டும் இருந்திருந்தா எங்க அப்பா மன்னாதி மன்னன்… மதுப் பழக்கத்தால் இறந்து போன தந்தைக்கு பேனர் வைத்த குழந்தைகள்…

சுருக்கம்

Death of a father by drunk

மன்னார்குடி அருகே தொடர் குடிப்பழக்கத்தால் வெளிநாட்டில் உயிரிழந்த தங்களது தந்தையின் நினைவாக அவரது இரண்டு மகள்கள் வைத்திருக்கும் நினைவஞ்சலி பேனர் அவ்வழியாக செல்வோரின் நெஞ்சை நெகிழ வைப்பதாக அமைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த  மேலநாகையைச் சேர்ந்தவர்  டிரைவர் சாமிநாதன். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த இவர், கடந்த ஆண்டு மே மாதம்  உயிரிழந்தார்.

இந்நிலையில் சாமிநாதனின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இரு பெண் குழந்தைகளும் குடும்பத்தினரும் நினைவஞ்சலி பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அந்த பேனரில் மது மட்டும்  இல்லை என்றால் எங்கள் தந்தை மன்னாதி மன்னன் என இந்த குழந்தைகள் தெரிவிப்பது போல் குறிப்பிடப்பட்டிருந்ததது.

நினைவஞ்லி பேனரில் சிறுமிகள் இருவர் குறிப்பிட்டுள்ள  இந்த வாசகம், ஆண்களின் குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எவ்வளவ் வருத்தமைடைகிறது என்பதையும், குழந்தைகள் தந்தைக்காக எவ்வாறு ஏங்குகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் அமைந்திருந்ததால், அந்த வழியாக சென்ற  பொது மக்கள் கண் கலங்கியபடி பார்த்துச் சென்றனர்.

கொந்தமாக கார் வாங்கி டாக்சி தொழில் செய்து வந்த சாமிநாதன் தொடர் குடிப்பழக்கத்தால் டாக்சியையும், வேலையையும் இழந்துள்ளார்.

பின்னர் அவர் வெளிநாடு சென்று வேலை செய்துள்ளார். அங்கும் அவர் மது குடித்து வந்ததால் நோய்வாய்பட்டு அங்கேயே உயிரிழந்துள்ளார்.


மிகுந்த சிரமத்திற்கிடையே அவரது உடல் திருவாரூர் கொண்டுவரப்பட்டது. தற்போது அவரது மனைவியும், குழந்தைகளும்  சாமிநாதனின் இழப்பை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

சாமிநாதனின் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது  என்பதை பிறருக்கு உணர்த்தவே இந்த  பேனர் வைக்கப்பட்டதாக அவரது மனைவி தவமணி தெரிவித்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?