குடி வெறியில் தகராறு; கட்டடத் தொழிலாளி கூரிய ஆயுதத்தால் அடித்தே கொலை…

 
Published : May 12, 2017, 09:36 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
குடி வெறியில் தகராறு; கட்டடத் தொழிலாளி கூரிய ஆயுதத்தால் அடித்தே கொலை…

சுருக்கம்

Dispute in drinking The building worker killed by a sharp weapon

நீலகிரி

உதகமண்டலத்தில் குடி வெறியில் ஏற்பட்ட தகராறில், கட்டடத் தொழிலாளி அடித்தேக் கொல்லப்பட்டார். கொன்றவர் தலைமறைவாகினார். காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் கை குட்ஸ்ஷெட் பகுதியில் வீடு கட்டி வருகிறார் முகமது அஜ்மல்.

இங்கு, தேனியைச் சேர்ந்த தங்கவேல் (30), தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை ஆகியோர் தங்கிக் கட்டட வேலை செய்தனர்.

இந்த நிலையில், இந்தக் கட்டடத்தில் தங்கவேல் நேற்றுக் காலை இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்து உதகை ஜி1 காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், தங்கவேலின் உடலில் ஆறு இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. இதனையடுத்து, தங்கவேலின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் மேகொண்ட விசாரணையில் நடந்ததைக் கண்டறிந்தனர் காவலாளர்கள்.

இதுகுறித்து காவலாளர்கள் கூறியது:

“கடந்த புதன்கிழமை இரவு தங்கவேலும், தர்மதுரையும் குடித்துள்ளனர். போதை வெறியில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த தர்மதுரை கூர்மையான ஆயுதத்தால் தங்கவேலை அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தர்மதுரை தலைமறைவாகியுள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம்” என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு