
தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர்த் தேடி வனப் பகுதி மற்றும் அதையொட்டிய கிராமங்களுக்குள் 20-க்கும் மேற்பட்ட கரடிகள் சுற்றி திரிவது காமிராவில் பதிவாகியுள்ளன.
தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் யானை, மான், கரடி, சிறுத்தைப்புலிகள் அதிகம் வாழ்கின்றன.
தற்போது வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், வன விலங்குகளுக்கான தண்ணீர் தேவையும் அதிகம்.
இதனை, பூர்த்தி செய்ய மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வன ஊழியர்கள் வாகனங்கள் மூலம் வனப் பகுதியில் உள்ள தொட்டி, குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனப் பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், தண்ணீரைத் தேடி வனப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கரடிகள் சுற்றி வருகின்றன.
மேலும், அதன் நடமாட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பதிவுகளின் மூலம் பர்கூர், வேப்பனப்பள்ளி வனப் பகுதியில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.