
கருப்பு பண ஒழிப்பு காரணமாக, கடந்த நவம்பர் மாதம், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாளான 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
அதற்கு பின் பல கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.அதனை தொடர்ந்து மக்கள் தங்கள் கையில் இருந்த, பணத்தையெல்லாம் வங்கி கணக்கில் செலுத்தினார்கள்.
பின்னர் பல கட்டுப்பாடுகளுடன், வங்கி கணக்கில் இருந்து, பணத்தை எடுத்து செலவு செய்தனர். முக்கிய காரணமாக இருப்பின் , அவர்களுக்கு ஆதாரத்தின் அடிப்படையில் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டது .
அதற்குண்டான அனைத்து ஆதாரமும் பெறப்பட்டது . இருந்தபோதிலும் தற்போது மீண்டும் சில கெடுபிடி விதித்து வருகிறது மத்திய அரசு
அதன் படி, 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் ரூ.2 லட்சத்திற்கும் மேலாக நடைபெற்ற அனைத்துவித பணப்பரிவர்த்தனைகளுக்கும் வருமான வரிக்கணக்கு சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
எதெல்லாம் கணக்கில் வரும் ?
ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வீட்டுக் கடன், கார் கடன் தவணைகள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்குரிய ஆவணங்களும் கண்டிப்பாக சமர்பிக்கபட வேண்டும் என, வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர் .
எனவே , 2 லட்சத்திற்கும் அதிகமாக பண பரிவர்த்தனை செய்தவர்களுக்கு விரைவில் தலைவலி ஆரம்பிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் .