இரட்டை மாட்டு வண்டி போட்டி..! சீறிப்பாய்ந்த மாடுகள்..! உற்சாகமடைந்த பொதுமக்கள்

By Ajmal KhanFirst Published Dec 11, 2022, 11:54 AM IST
Highlights

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள  மார்க்கையன்கோட்டையில்  இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது. இந்த பந்தையத்தில் 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கெண்டது சீறிப்பாய்ந்தது.
 

மாட்டு வண்டி போட்டி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  மார்க்கையன்கோட்டை பேரூராட்சி தலைவர் முருகன்  தலைமையில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தினை தேனி  வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த மாட்டுவண்டி பந்தையத்தில் தேனி மற்றும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் மற்றும் வண்டி சாரதிகள் கலந்து கொண்டனர். 

150 மாடுகள் பங்கேற்பு

இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தையம்  இளஞ்ஜோடி, புள்ளிமான், பூஞ்சிட்டு,கரிச்சான், நடுமாடு,பெரியமாடு 6 வகையான பிரிவுகளில் 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை , உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த போட்டியானது மார்க்யன்கோட்டையில் இருத்தது சங்கராபுரம் செல்லும்  சாலையில் 10  கிலோமீட்டார் தூரம் வரை நடைபெற்றது. இளஞ்ஜோடி  மாடுகள் 18 வண்டிகளும் 2 கிலோமீட்டர் தூரமும், புள்ளிமான் ஜோடி மாடுகள்  22 வண்டிகள் 3 கிலொமீட்டர் தூரமும்,  தேன்சிட்டு 56 வண்டிகள் 4 கிலோ மீட்டர் தூரமும் என பல்வேறு வகையான மாடுகளுக்கு பந்தயம் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுமக்கள் உற்சாகம்

ஒவ்வொரு பிரிவிலும் முதலில் கொடி வாங்கும் மாட்டுவண்டி மற்றும வண்டி ஓட்டும் சாரதிக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை சாலையில் இருபுறங்களில் நின்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இதையும் படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டம் மேலும் ஒருவர் தற்கொலை..! கண்டுகொள்ளாத ஆளுநர்- அன்புமணி ஆவேசம்

click me!