எப்போதும் இல்லாத பருவமழை! உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்! 

 
Published : Nov 03, 2017, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
எப்போதும் இல்லாத பருவமழை! உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்! 

சுருக்கம்

Monsoon without ever

வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்துக்கு நல்ல மழைப் பொழிவை அளித்துள்ளதால், தமிழக விவசாயிகள் மிகவும் உற்சாகமாக விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

140 ஆண்டுகளாக காணாத வறட்சியினை தமிழகம் கடந்த வருடம் சந்தித்து. இதனால், விவசாயம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இந்த வருடம் துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால், தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. 

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நவம்பர் 5 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வரும்ட நிலையில், விவசாயிகள் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு உற்சாகத்தோடு விதைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி விதைப்பு பணிகள் தொடங்க உள்ளது என்றும், நெல் விதைப்பு பணிகளைத் தொடங்க தயாராக உள்ளதாகவும் டெல்டா விவசாயிகள் நல சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.ரங்கநாதன் கூறினார்.

தேவையான அளவுக்கு பருவமழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் விதைப்புக்கு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். முந்தைய தென்மேற்கு பருவமழையால் தமிழக விவசாயிகள் எந்த பயனும் அடையாத சூழலில், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பயனடைய முடியும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி