Monkey rescue viral video: அந்த மனசு தான் சார்..! முதலமைச்சர் பாராட்டு

Published : Dec 17, 2021, 03:01 PM IST
Monkey rescue viral video: அந்த மனசு தான் சார்..! முதலமைச்சர் பாராட்டு

சுருக்கம்

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் சமத்துவபுரம் கிராமத்தில் நான்குக்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை, தன் மூச்சை கொடுத்து முதலுதவி செய்து காப்பாற்றிய கார் ஓட்டுனர் பிரபுவை, நேரில் அழைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.  

பெரம்பலூர் மாவட்டம் ஓதியம் சமத்துவப்புரம் கிராமத்தில் நாய்கள் கடித்ததில்  உயிருக்கு போராடிய குரங்கை, மூச்சு கொடுத்து காப்பாற்றிய கார் ஓட்டுனரை  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். 4 க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை மூச்சு கொடுத்து காப்பாற்றிய கார் ஓட்டுநர் பிரபுவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கார் ஓட்டுனர் பிரபுவின் செயலை பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திற்கு அவரை வரவழைத்து பாராட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, ஒரு சாதாரண குரங்கு என்னை இந்த இடத்தில் வந்து நிறுத்தியிருக்கிறது என்றும் நான் எதையும் எதிர்பார்த்து இச்செயலை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குரங்கை காப்பாற்றும் போது வீடியோ எடுத்தது கூட எனக்கு தெரியாது என்ற அவர் ஒரு உயிரை காப்பாற்றிய நிகழ்வு என்னை தற்போது இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்று பெருமையுடன் கூறினார்.

மேலும் அவர் சமீப காலமா வனபகுதிகளிலிருந்து ஊருக்குள் வரும் விலங்குகள் குறித்து நாம் அதிகமாக செய்திகள் பார்க்கிறோம். காட்டிற்குள் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவது உணவுக்காகத்தான் என்று கூறியவர், அப்படி ஊருக்குள் வரும் வன விலங்குகளை யாரும் துன்புறுத்த வேண்டாம் என்பதே என் கோரிக்கை. முடிந்தவரை ஊருக்குள் வரக்கூடிய விலங்குகளுக்கு உணவளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

PREV
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு