#BREAKING: Tamil Nadu State Anthem :தமிழ்த்தாய் வாழ்த்து.. தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு..

By Thanalakshmi V  |  First Published Dec 17, 2021, 1:42 PM IST

தமிழ்த்தாய் வாழ்த்துபாடலை தழிழ்நாட்டின் மாநில பாடலாக அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 


"தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து"

- மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு. pic.twitter.com/OpEFyjKQmp

— DMK (@arivalayam)

இதுக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Latest Videos

 

click me!