பணம் இருந்தால் தான் ஜெபம்…. மதப் போதகர் மோகன் சி லாசரஸின் அந்தரங்கங்களை புட்டு புட்டு வைக்கும் சகலை !!

Published : Jan 19, 2019, 07:55 PM IST
பணம் இருந்தால் தான் ஜெபம்…. மதப் போதகர் மோகன் சி லாசரஸின் அந்தரங்கங்களை புட்டு புட்டு வைக்கும் சகலை !!

சுருக்கம்

மதப் போதகர் மோகன் சி லாசரஸ் உண்மையான  கிறிஸ்துவர்களை மதிக்கத் தெரியாதவர் என்றும் யார் 2 லட்சம்… 3 லட்சம் என்று பணம் தருகிறார்களோ அவர்களது வீட்டுக்கே சென்று அவர் ஜெபம் செய்வார் என்றும் அவரது சகலை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்த மதப் போதகர் மோகன் சி லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் என்ற மத நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை நாலுமாவடியில் நடைபெறும் ஜெபக் கூட்டத்துக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்துவிட்டு போவார்கள்.

அது போக இந்தியா முழுவதும் மோகன் சி லாசரஸ் சுற்றுப் பயணம் செய்து ஜெபக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அவர் அவ்வப்போது ஜெபக் கூட்டங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும். அண்மையில் இந்து மதம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் மோகன் சி லாசரஸின் சகலையும் மற்றொரு மதப் போதகருமான அருள் என்பவர் மோகன் சி லாசரஸ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வீசியுள்ளார். மோகன் சி லாசரஸ் உண்மையான  கிறிஸ்துவர்களை மதிக்கத் தெரியாதவர் என்றும் யார் 2 லட்சம்… 3 லட்சம் என்று பணம் தருகிறார்களோ அவர்களது வீட்டுக்கே சென்று அவர் ஜெபம் செய்வார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏழைகள் என்பதே அவரது கண்ணுக்கு தெரியாது என்றும் சொத்து  சேர்ப்பதே அவரது லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார். உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு பிரபல தொழிலதிபர் 9 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் சகலை தெரிவித்துள்ளார்.

அதே போல் நாலுமாவடியில் உள்ள ஜெபகூடத்தில் பல குற்றங்கள் நடத்துள்ளதாகவும் அதை மறைக்க மோகன் சி லாசரஸ் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து தப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மோகன் சி லாசரஸின் அனைத்து அந்தரங்க விஷயங்களும் தனக்கு தெரியும் அதை நான் வெளியே சொல்லிவிடுவேன் என்பதால் 50 லட்சம் ரூபாய் கூலி கொடுத்து தன்னை கொலை செய்ய அவர்  திட்டமிட்டிருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை சகலை தெரிவித்துள்ளார்.

இவர் மட்டும் தான் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் முன்னேறுவதை கொஞ்சம் கூட அவர் சகித்துக் கொள்ளாதவர் மோகன் சி லாசரஸ் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சீமான் பேச்சை காப்பியடித்தாரா விஜய்?.. ஆதாரங்களை அடுக்கும் 'தம்பிகள்'.. இணையத்தில் மோதல்!
என் வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சி..! தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு!