மரண படுக்கையில் தந்தை... கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட மகன்..!

Published : Jan 19, 2019, 12:07 PM IST
மரண படுக்கையில் தந்தை... கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட மகன்..!

சுருக்கம்

சென்னையில் உயிருக்கு போராடும் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மகன், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

சென்னையில் உயிருக்கு போராடும் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மகன், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் சேர்ந்தவர் சுதேஷ் (60). இவர் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். 

இந்நிலையில கடந்த 11-ம் தேதி திருவொற்றியூர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுதேஷ்  ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். 

இந்நிலையில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடைய மகன் சதீஷ், தான் காதலித்து வந்த சித்ரா என்ற பெண்ணை மணமுடிக்க முடிவு செய்தார். இதனையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 

மணமக்கள் ஜோடியாக சென்று மரண படுக்கையில் இருந்த தந்தையிடம் ஆசி பெற்றனர். தமது தந்தை விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று சதீஷ் உருக்கத்துடன் கூறினார். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்து அனைவரின் கண்ணீலும் கண்ணீர் வர செய்தது. 

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை