TNPSC : அரசு தேர்வுக்கு...படிக்கும் மாணவர்களே.. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ! இதோ !!

By Raghupati RFirst Published Jan 5, 2022, 7:42 AM IST
Highlights

டி.என்.பி.எஸ்.சி  தான் நடத்த இருக்கும் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 உள்பட அனைத்து விதமான தேர்வுகளிலும் புதிய நடைமுறையை கொண்டு வந்து இருக்கிறது. 

டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி  அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடுமையான பயிற்சி எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், வினாத்தாள் தொடர்பாக தேர்வர்களுக்கு குழப்பம் இருந்து வருகிறது. 

ஏனென்றால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா? அல்லது புதியதாக பாடத்திட்டம் வெளியிடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது. 

தேர்வர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் விரைவில் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் புதியதாக வெளியிடப்படும் எனக் தெரிவித்திருந்தது. மேலும், அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் போதும் என்றும் கூறியிருந்தது. 

 

அதன்படி, சமீபத்தில் குரூப்-1, 2 மற்றும் 2ஏ உள்பட சில பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  தற்போது குரூப்-3, 4, 7-பி, 8 போன்ற பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

 

இந்த தமிழ் மொழி தகுதித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அதற்கடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே தேர்வை எதிர்கொள்ள இருக்கும் தேர்வர்கள் அந்த பாடத்திட்டத்தை பார்த்து வருகிற மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள குரூப்-4 பதவிகளுக்கான தேர்வை எதிர்கொள்ள தயாராகுவதற்கு ஏதுவாக இருக்கும்.

click me!